உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு ஒரு புது வசதியை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப்.

அதாவது வாட்ஸ்ஆப்பில் தனி நபரது சாட்டுகளை லாக் செய்யும் புது வசதி அறிமுகமாகியுள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட சாட்டுகளை மறைத்து வைக்க முடியும். அது, உங்களது வாட்ஸ்ஆப் சாட் ஹிஸ்ட்ரியில் காட்டாது. யாருடைய சாட்டை மறைத்து வைக்க நினைக்கிறீர்களோ அந்த ஃப்ரொபைலை அழுத்தி பிடித்தால்(long press) லாக் செய்யும் வசதி கேட்கும். இப்போது இருக்கும் லேட்டஸ்ட் வெர்ஷனில் மட்டுமே இந்த அம்சம் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.