தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் தற்போது ஒரு சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.
மேலும் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோவில், ‘தீம் மியூசிக் ரெடியா?’ என அனிருத் கேட்க, ‘யாரு ஹீரோ?’ என கமலும் ரஜினியும் மாறி மாறி வினவும் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
The Power Combo. ✋🔥#INDIAAlliance#RahulGandhi#MKStalin#SocialJustice#Congress pic.twitter.com/hnEDnh2mX6
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) March 7, 2026
“>
இந்நிலையில், இந்த ப்ரோமோ வீடியோவை அரசியல் களத்திற்கு ஏற்றவாறு எடிட் செய்து, ரஜினி மற்றும் கமல் முகங்களுக்குப் பதிலாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் முகங்களைப் பொருத்தி தமிழக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
“தீ பவர் காம்போ” என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த வீடியோ, இந்தியா கூட்டணியின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகக் கூறி உடன்பிறப்புகளும் காங்கிரஸ் தொண்டர்களும் இதனை உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
