தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு மிகச்சிறந்த செய்தியாக, அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 15 சதவீதமும், அகவிலைப்படியில் 55 சதவீதமும் உயர்த்தி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, புதிதாகப் பணியில் சேரும் விற்பனையாளர்களுக்கு முதல் ஒரு வருடம் 7,500 ரூபாயும், கட்டுனர்களுக்கு 6,600 ரூபாயும் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
பணி தொடங்கி ஓராண்டு முடிந்த பிறகு, விற்பனையாளர்களுக்கு 39,600 ரூபாய் வரையிலும், கட்டுனர்களுக்கு 35,000 ரூபாய் வரையிலும் காலமுறை ஊதியம் வழங்கப்பட உள்ளது. இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களுக்கு 3 சதவீத ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளதால் ரேஷன் கடை பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
