புதுச்சேரி மாநில அரசியலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே யார் பெரியவர் என்ற ‘ஈகோ’ மோதலால் கூட்டணியில் கடும் குழப்பம் நிலவி வருகிறது. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்குத் தங்கள் அலுவலகத்திற்குத்தான் வர வேண்டும் என இரு கட்சிகளின் நிர்வாகிகளும் பிடிவாதமாக இருப்பதால், முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஒருமித்த கருத்து எட்டப்படாததால், கூட்டணிக்குள் நிலவும் இந்த அதிகாரப் போட்டி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இழுபறிக்கு மத்தியில், திமுக தனது அடுத்தகட்ட நகர்வாக விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. காங்கிரஸ் உடனான மோதல் முற்றியுள்ள நிலையில், மற்ற கூட்டணி கட்சிகளைத் தன் பக்கம் இழுக்க திமுக எடுக்கும் இந்த முயற்சி, புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
