தமிழகத்தில் ஏற்படும் மின்தடைக்குத் தனிநபர்களும் ஒரு காரணமாக இருக்கிறார்கள்; அத்தகைய நபர்கள் மீது இன்று இரவுக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அதிரடியாக எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தனிநபர்களின் தவறான செயல்பாடுகளால் மின்சாரம் தடைபடுவது கண்டறியப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

இத்தகைய நபர்கள் யாருடைய தூண்டுதலின் பேரில், என்ன காரணத்திற்காக இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று தெரியவில்லை எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், மின்கட்டமைப்பில் வேண்டுமென்றே குளறுபடி செய்யும் இத்தகைய சமூக விரோத சக்திகள் மீது இன்று இரவுக்குள்ளாகவே காவல்துறை மற்றும் துறை ரீதியாக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அதிரடி பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்திலும், மின்சார வாரியத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.