தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக) தலைவர் விஜய் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு பெண் தொண்டரின் வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், “எங்களை யாரைப் பார்த்து தற்குறிகள் என்று கூறினீர்கள்? யாருக்கு வெறும் 10 மற்றும் 15 சதவீத ஓட்டுகள் தான் கிடைக்கும் என்று கிண்டல் செய்தீர்கள்? இப்போது இங்கு பாருங்கள்” என்று சவால் விடுகிறார்.

View this post on Instagram

A post shared by KK (@kishkar12)

​மேலும், தொலைக்காட்சியில் வெளியாகும் தவெக-வின் முன்னிலை நிலவரங்களைச் சுட்டிக்காட்டி, அந்தப் பெண் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடனமாடி தனது உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார். விஜய்யின் அரசியல் வருகையைக் கேலி செய்தவர்களுக்கும், அவர் குறைவான வாக்குகளே பெறுவார் என்று கணித்தவர்களுக்கும் இந்தப் பெண் தனது வீடியோ மூலம் பதிலடி கொடுத்துள்ளார். தற்போது தவெக முன்னிலை வகிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், இந்தப் பெண்ணின் இந்த உணர்ச்சிப்பூர்வமான கொண்டாட்ட வீடியோவை தவெக தொண்டர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.