
பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்ததில் இருந்து காய்ச்சல் வந்துவிட்டது. அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அம்பாசமுத்திரத்தில் ஒரு 17 வயது சிறுமியை போதை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வள்ளியூரில் ஒரு மூதாட்டி 17 சவரன்தங்க நகைகளுக்காக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுபோன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் போதைப்பொருள் நடமாட்டமும் இருக்கும் நிலையில் அதனை மறைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஓரிணியில் தமிழ்நாடு என்ற பெயரில் ஊர் ஊராக செல்கிறார். இதனால் எந்த நன்மையும் கிடையாது. இந்த திமுக அரசு மக்கள் விரோத அரசாக இருக்கிறது.
கண்டிப்பாக அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். முதல்வருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி பேச வேண்டியததை தான் பேசியுள்ளார். மேலும் அவர் டம்மி வாய்ஸ் ஆக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று கூறினார்.