திமுகவின் சமீபத்திய மாநாட்டில் வழங்கப்பட்ட பிரியாணி மற்றும் அதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் பெண் ஒருவரின் காணொளி காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “முன்பு தவெக மாநாட்டின் போது பிஸ்கட் கொடுத்தார்களா, தண்ணீர் கொடுத்தார்களா என்று கிண்டல் செய்த அதே பெண், இப்போது திமுக மாநாட்டில் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டதை கையில் எடுத்துள்ளார்.” அந்தப் பெண் மட்டன் பீஸை கடித்துக் காட்டி, “சுமார் 10 லட்சம் பேருக்கு 1 லட்சம் கிலோ மட்டன் சமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இவ்வளவு பெரிய தொகைக்கு யார் அப்பன் வீட்டு காசை செலவு செய்தீர்கள்? இது தமிழ்நாட்டு மக்களின் ரத்தமும் வேர்வையும் அல்லவா?” என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு இலட்சம் கிலோ மட்டன்! யார் அப்பன் வீட்டு காசு?
தமிழக மக்களுடைய ரத்தமும் வேர்வையும் இந்த திமுக மாநாட்டில் பிரியாணியா ஓடுது #TVKVijay #TVKVijayHQ #TVKfor2026 pic.twitter.com/4wv5oNjjAj
— anushiya (@anushiyaxx) March 12, 2026
மேலும், அந்த மாநாட்டிற்காக மட்டும் சுமார் 1200 சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். “சாதாரண மக்களுக்கு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் வேளையில், ஆளுங்கட்சி மாநாட்டிற்கு மட்டும் 1200 சிலிண்டர்கள் எப்படி தடையின்றி கிடைத்தது?” என அவர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டை விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்தப் பேச்சு, தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மக்களின் வரிப்பணத்தை வைத்துத்தான் இத்தகைய ஆடம்பர விருந்துகள் நடக்கிறதா என்ற ரீதியில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
