சோசியல் மீடியாவில் தினமும் எத்தனையோ வினோதமான வீடியோக்கள் வைரலானாலும், இந்த வீடியோ பார்ப்பவர்கள் எல்லோரையும் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணைத் தொடும் இந்த காலத்தில், ஒரு நபர் எவ்வித எரிபொருளும் இல்லாமல் கார் ஓட்டும் ஒரு புதிய பாணியைக் கண்டுபிடித்துள்ளார். தனது காரின் முன்பக்க போனெட்டில் ஒரு சைக்கிளைப் பொருத்தி, அதை மிதிப்பதன் மூலம் காரை முன்னோக்கிச் நகர்த்துகிறார். “பெட்ரோல் போட காசு இல்லனா என்ன… நம்மகிட்ட கால் பலம் இருக்கே!” என்பது போல அந்த நபர் சைக்கிளை மிதிக்க மிதிக்க கார் மெதுவாகச் சாலையில் ஊர்ந்து செல்கிறது.

​எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து இணையத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இது காரா இல்ல சைக்கிளா?” எனத் திகைத்துப் போயுள்ளனர். சிலர் இந்த நபரை “ஜீனியஸ்” என்று கொண்டாடி வர, வேறு சிலரோ “இதை ஓட்ட பெட்ரோல் செலவை விட, இவருக்குத் தேவையான சாப்பாட்டுச் செலவு அதிகமாகும் போலயே!” என ஜாலியாகக் கமெண்ட் அடித்து வருகின்றனர். எது எப்படியோ, புதுமையான முறையில் யோசித்து பெட்ரோல் விலைக்கு ஒரு எண்ட் கார்டு போட்ட இந்த நபரின் வீடியோ தான் இப்போது டாப் ட்ரெண்டிங்!