புதுச்சேரி என்டிஏ (NDA) கூட்டணியில் சார்லஸ் மார்ட்டின் தலைமையிலான லட்சிய ஜனநாயக கட்சி அதிரடியாக இணைந்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தக் கூட்டணியில், மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை என்.ஆர். காங்கிரஸுக்கு 16 இடங்களும், பாஜகவிற்கு 10 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், திடீரென லட்சிய ஜனநாயக கட்சி என்டிஏ பக்கம் சாய்ந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
