கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது லலிதா என்ற பெண்மணிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் இறந்துவிடவே, குடும்பச் செலவுகளுக்காக ஓட்டலிலும், தோட்டத்திலும் வேலை செய்து வந்தார். அப்போது, ஓட்டலில் வேலை செய்த 35 வயது சிவலிங்கப்பா என்பவருடன் லலிதாவுக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதல் உறவாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

​சமீப நாட்களாக லலிதா செல்போனில் வேறு ஒருவருடன் பேசுவதைச் சிவலிங்கப்பா கவனித்துள்ளார். இதனால் லலிதா மீது அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டு, இருவருக்கும் இடையே சண்டை அதிகரித்தது. இதன் விளைவாக, கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி, தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த லலிதாவுடன் சண்டையிட்ட சிவலிங்கப்பா, ஆத்திரத்தில் கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இதையடுத்து, போலீசார் சிவலிங்கப்பாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.