சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில், ஒரு இளம்பெண், ஒரு பெரிய, கொடூரமான முதலையை குழந்தையைப் போலக் கைகளில் சுமந்து செல்லும் காட்சி காணப்படுகிறது. இந்த காட்சியில், அந்த முதலை மிகப்பெரிதாகவும், மிகவும் ஆபத்தான தோற்றத்தையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இது “டார்த் கேட்டர்” எனப்படும் அபாயகரமான முதலை இனத்தைச் சேர்ந்தது எனக் கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண்ணின் முகத்தில் ஒரு சிறிதும் பயம் இல்லாமல், மிகவும் நிதானமாகவும், நம்பிக்கையுடன் முதலையை அணைத்துக் கொண்டு செல்கிறார்.
வீடியோவில் காணப்படும் அந்த இளம்பெண், 23 வயதான ஜூலியட் ப்ரூவர் ஆவார். இவர் கலிபோர்னியாவின் ஃபவுண்டன் பள்ளத்தாக்கில் இயங்கும் தி ரெப்டைல் சூ (The Reptile Zoo) எனும் ஊர்வனங்களுக்கான மிருகக்காட்சிசாலையின் நிறுவனர் ஜே ப்ரூவரின் மகள். தனது தந்தையைப் போலவே, ஜூலியட்டும் பாம்புகள், முதலைகள், மற்றும் பிற ஊர்வனங்களுடன் பழகி, அவற்றுடன் கூடிய வீடியோக்கள், புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.
View this post on Instagram
இந்த வீடியோ, Instagram தளத்தில் @thereptilezoo என்ற கணக்கில் பதிவிடப்பட்டதைத் தொடர்ந்து, இணையவாசிகளிடையே பலவிதமான கருத்துகளை உருவாக்கியுள்ளது. ஒரு பயனர், “உனக்கு பயமாக இல்லையா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இன்னொருவர், “சகோதரி, அவர்களிடம் இருந்து விலகுங்கள்… எப்போது தாக்குவார்கள் என்று தெரியாது!” என அச்சத்துடன் கூறியிருந்தார்.
மேலும் முதலைகளுடன் மிக நெருக்கமாக பழகும் ஜூலியட்டின் தைரியம், ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஒருசேர இணைய உலகத்தில் கிளப்பியுள்ளது.
