வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயல் நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இதன் தீவிர தாக்கத்தால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (அக். 28) ‘மிக கனமழை’க்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்புள்ளதால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மட்டுமின்றி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நெல்லை (திருநெல்வேலி), கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.