டெல்லியில் இன்று நடைபெற்ற 9-வது ‘பரீட்சை பே சர்ச்சா’ நிகழ்ச்சியில், தேர்வு பயத்தைப் போக்க பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மாணவர்கள் தாங்களே உருவாக்கிய மெட்டமைப்பில் ஒரு உத்வேகமான பாடலைப் பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
இது குறிப்பாக, வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கண்பார்வையற்ற மாணவி, அசாமிய பாரம்பரிய உடை அணிந்து முன்னேறு, தொடர்ந்து முன்னேறு என்ற பாடலை உருக்கமாகப் பாடினார். தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை வலியுறுத்தும் அந்தப் பாடலின் வரிகளும், மாணவர்களின் இசைத்திறனும் அரங்கத்தையே அமைதியில் ஆழ்த்தியது. மாணவர்களின் இந்தத் திறமையைக் கண்டு பிரதமர் மோடி நெகிழ்ந்து போனார்.
மேலும் பாடலைப் பொறுமையுடன் ரசித்துக் கேட்ட பிரதமர், அதன் முடிவில் உற்சாகமாக கைதட்டி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். “இது பெண் அதிகாரமளித்தலுக்குச் சிறந்த உதாரணம்” என்று பாராட்டியதோடு, மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் துணிச்சலை ‘வேற லெவல்’ ரியாக்ஷன் மூலம் அங்கீகரித்தார்.
இந்நிலையில் தேர்வு என்பது வெறும் மதிப்பெண்களுக்கானது மட்டுமல்ல, அது ஒருவரது உள்ளொளியை வெளிப்படுத்தும் திருவிழா என்பதை உணர்த்தும் வகையில் அமைந்த இந்த இசைத் தருணம், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
