தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வியூகம் மோடி மற்றும் அமித்ஷாவை நடுங்க வைத்துள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பிடிக்கும் இட்லி பிடிக்கும் என்ற மோடியின் நாடகம் திமுகவுக்கு செக் வைப்பதற்காகவே. ஆனால் திமுக தேர்தல் நேர கட்சி அல்ல, தமிழ் இனத்தின் காப்பாளர், தேசத்தை காப்பாற்றும் கட்சி. மோடியின் வித்தைகள் தமிழகத்தில் எடுபடாது. நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிரான அலை வீசுவதாக விமர்சித்துள்ளார்.