கோயம்புத்தூரில் இருந்து கேரளாவிற்கு லாரியில் ஜெலட்டின் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் நேற்று அதிகாலை மதுக்கரை அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிகாலை 4 மணிக்கு அந்த வழியாக வந்த லாரியை போலீசார் சோதனை செய்தனர். அப்போது லாரிக்குள் பெட்டி பெட்டியாக ஜெலட்டின் குச்சிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அதில் 2000 கிலோ ஜெலட்டின் குச்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. லாரியை ஓட்டி வந்த சுபேர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் கேரளாவில் உள்ள கல்குவாரிக்கும் மலைகளை உடைக்க ஜெலட்டின் வெளி மருந்து குச்சிகளை கொண்டு செல்வதாக ஓட்டுனர் கூறியுள்ளார். அவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.