தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் 326 அரசு பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகளை அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 8,03,385 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வண்ணம் உள்ளன. அதோடு சேர்த்து மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் நகலை மே 12ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாகவும் தனித்தேர்வர்கள் தேர்வு மையம் மூலமாகவும் மதிப்பெண் பட்டியல் நகலை பெற்றுக் கொள்ளலாம்.