தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மே பத்தாம் தேதி புயலாக உருவெடுக்கும். இதனால் நாளை முதல் மே 12ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என எச்சரித்துள்ளது.