தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் 326 அரசு பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகளை அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 8,03,385 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நமது பிள்ளைகள் எந்தவித மதிப்பெண் எடுத்தாலும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது நமது கடமை என பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை வழங்கியுள்ளார். தேர்ச்சி பெற முடியாத சூழ்நிலையில் உள்ள மாணவர்களுக்கு உடனடியாக தனித்தேர்வுகள் நடத்தி அவர்களும் இதே கல்வியாண்டில் உயர் கல்வியில் சேர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். அதேசமயம் மாணவர்களை ஊக்கமளிக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.