மே 1, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று தொழிலாளர் தினம், புத்த பூர்ணிமா மற்றும் மகாராஷ்டிரா தினம் ஆகிய சிறப்பு தினங்களை முன்னிட்டு இந்தியா முழுவதும் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய பங்குச் சந்தை மற்றும் பம்பாய் பங்குச் சந்தை ஆகியவற்றில் வர்த்தகம் நடைபெறாது.
வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், ஏடிஎம், மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் யுபிஐ போன்ற ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்பதால் வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனைகளைத் தடையின்றி மேற்கொள்ளலாம்.
மே மாதத்தைப் பொறுத்தவரை அடுத்தடுத்து பல விடுமுறை நாட்கள் வருகின்றன. இன்று மே 1 விடுமுறைக்கு பிறகு, மே 3 ஞாயிறு, மே 9 இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஜெயந்தி, மே 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வரும் பக்ரீத் பண்டிகை எனப் பல நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் நாளை விடுமுறை என்பதால், தங்கள் பரிவர்த்தனைகளை அடுத்த வேலை நாளில் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
