மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாளில் தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் இன்று பெருமை அடைவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத சில நன்மைகள் ஏற்படக்கூடும்.

இன்று தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும் பயம் வேண்டாம். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். செய்யும் செயலை நிதானமாக செய்து பாராட்டுகளை பெறுவீர்கள். பெண்கள் இன்று குடும்பத்தை அனுசரையுடன் நடத்த வேண்டும். பெரியவர்களின் சொல் கேட்டு செயல்படுங்கள்.

எந்த ஒரு முடிவை எடுக்கும் போதும் தெளிவாக சிந்தித்து எடுங்கள். இன்று மாணவர்கள் முழு முயற்சியால் கல்வியில் வெற்றி பெறுவீர்கள். கல்வியின் மீது முழு அக்கறை ஏற்படும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை. இன்று விஷ்ணு பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு செயலிலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

 

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்