ரிஷப ராசி அன்பர்களே,

இன்று கொஞ்சம் ஓய்வாக காணப்படுவீர்கள். செய்யும் செயல்களை நிதானமாக செய்து பாராட்டுகளை பெறுவீர்கள். மற்றவர்களை நம்பி எந்த ஒரு வேலையும் ஒப்படைக்க வேண்டாம். உங்களால் செய்ய முடியும் பட்சத்தில் செய்யுங்கள், இல்லையல் விட்டுவிட பாருங்கள்.

முடிவுகளை எடுக்கும் போது கவனமாக இருங்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வ கோயிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணங்கள் மேலோங்கும். இன்று திறமைகள் வெளிப்படும் சூழல் உள்ளது. பெண்களுக்கு இந்த நாள் இல்ல தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும்.

மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை இருக்கும். இன்று மாணவர்கள் கல்வி மீது அக்கறை கொள்வீர்கள். புது முயற்சிகளால் வெற்றி பெறுவீர்கள். இன்று விஷ்ணு பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: ஐந்து மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்