மீன ராசி அன்பர்களே,

இன்று பதட்டம் இல்லாமல் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சுய கௌரவம்  மேலோங்கும். இன்று அன்பால் அனைவரையும் அரவணைத்துக் கொள்வீர்கள். பாதுகாப்பு நடைமுறைகளை சரிவர பின்பற்றவும். பொறுமையாக எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடுங்கள். அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். சகோதர சகோதரிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுங்கள்.

இன்று மாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. திட்டமிட்டு எதை செய்தாலும் வெற்றி இருக்கும். தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்லுங்கள். நண்பர்க ள் மற்றும் உறவினர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு சரியாகும்.

இன்று பெண்கள் கோபப்பட வேண்டாம். கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக இருங்கள். அனைவரிடமும் சிரித்த முகத்துடன் இருங்கள். பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். இன்று மாணவர்கள் பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ளப் பாருங்கள். எதையும் சிந்தித்து செயலாற்றுவது நல்லது. இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை:  கிழக்கு

அதிஷ்ட எண்:  7 மற்றும் 9

அதிஷ்ட நிறம் : பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்