மேஷம் ராசி அன்பர்களே, 

இன்று சந்தித்தவர்களால் கண்டிப்பாக சந்தோஷம் கிடைக்கும். எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்க முடியும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய செய்திகள் வந்து சேரும். பாதியில் நின்ற பணிகளை மீண்டும் தொடர்வீர்கள்.

பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். சிந்தித்து செயல்படுவது நன்மையை கொடுக்கும். நிதானமாக செயல்களில் ஈடுபடுவது வெற்றிக்கு வழிவகுக்கும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். இன்று பெண்களுக்கு இல்லம் சிறந்து விளங்கும்.

அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். திருமண முயற்சிகளில் நல்ல வரன் அமையும். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும். கவனத்துடன் பாடங்களை படிக்க வேண்டும். சிந்தித்து எதிலும் ஈடுபடுங்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்