ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்படும். சந்தித்தவர்களால் சந்தோஷம் ஏற்படும். உத்தியோக முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். வரவு திருப்தியை கொடுக்கும். பொது வாழ்க்கையில் புகழ் கூடிவிடும். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். கடல் தாண்டி வரும் செய்தி மகிழ்ச்சியை கொடுக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வீண் அலைச்சலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இன்று பெண்களுக்கு சுப காரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணம் முயற்சியில் நல்ல வரன்கள் வீடு தேடி வரும். ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். திறமையால் வெற்றி பெறுவீர்கள். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருங்கள். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெறுவீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: இரண்டு ஆறு மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்