மிதுனம் ராசி அன்பர்களே, 

இன்றைய எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். முன்னேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனமாற்றத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இறைவன் வழிபாட்டில் முழு கவனம் எடுத்துக் கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும்.

விரோதங்கள் விலகி செல்லும். போட்டியாக இருந்தவர்கள் ஒத்துழைப்பாக நடந்து கொள்வார்கள். திறமையால் வெற்றி பெறும் சூழல் இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். இந்த நாள் அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். இன்று பெண்களுக்கு காரியங்கள் கைகூடும்.

எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவர்கள் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5, 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்