தமிழ் திரை உலகில் பிரபல கதாநாயகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன் இவர் மண்டேலா திரைப்படத்தின் இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இம்மாதம் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 7:00 மணிக்கு வெளியானது.

இந்த படத்தில் இயக்குனர் மிஸ்கின், அதிதி சங்கர், யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மாவீரன் திரைப்படத்தின் டிரைலரை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.