தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஆன லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் தற்போது விஜய் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் திரிஷா மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் படம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் நீயோ திரைப்படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் விஜய் குரலில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் துள்ளல் இசை பாடலாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இந்த பாடலுக்கு ரீல் செய்து ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Venkatesh R Iyer இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@venky_iyer)