விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ரசிகர்களை அதிகம் ஆக்கிரமித்த இந்த நிகழ்ச்சி ஆறு சீசன்களை வெற்றிகரமாக முடித்து ஏழாவது சீசன் தொடங்க இருக்கிறது. இந்த சீசனில் கலந்து கொள்பவர்கள் இவர்கள்தான் என சிலரின் பெயர்களும் இணையத்தில் உலா வர தொடங்கிவிட்டது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7-ல் முதல் போட்டியாளராக கோயம்புத்தூரை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்த அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து கமல்ஹாசன் அவர்கள் அவருக்கு கார் வாங்கிக் கொள்ள 3 லட்சம் ரூபாய் தனது அலுவலகத்திற்கு அழைத்து கொடுத்தார். அந்த சமயத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை சில நாட்கள் காத்திருந்து தான் தெரிந்து கொள்ள முடியும்.