தவெக-வின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜய் இன்று கொடியேற்றி, தொண்டர்களிடையே உரையாற்றினார்.
அப்போது மேடையில் அவர் திடீரென அதிர்ச்சியடைந்தது போன்ற சில காட்சிகள் சமூக வலைதளங்களில் ‘கிளிக் பெய்ட்’ (Clickbait) தலைப்புகளுடன் வைரலாகி வருகின்றன. ஆனால், உண்மையில் மேடைக்கு அருகே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக மிகுதியால் தடுப்புகளை மீறி முன்னேற முயன்றபோது, அவர்களின் பாதுகாப்பைக் கருதி விஜய் ஒரு நிமிடம் பதற்றமடைந்தாரே தவிர, அது பயம் இல்லை என அங்கிருந்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
மேடையில் திடீரென பயந்த விஜய்.. வெளியான திடுக்கிடும் காட்சி…!#vijay #TVK #TVK3rdYear #TVKAnniversary #TVK3Years #Panaiyur #PanaiyurEvent #TVKPanaiyur #TamilNews #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/cGjqm0dWZm
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) February 2, 2026
“>
குறிப்பாக, தள்ளுமுள்ளுவில் சிக்கிய தொண்டர்களைப் பார்த்த விஜய், உடனடியாகப் பாதுகாப்புக் குழுவினரை எச்சரித்து அவர்களை ஒழுங்குபடுத்தும் படியும், யாருக்கும் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினார். இந்தச் சம்பவத்தைத் தான் “விஜய் பயந்தார்” எனச் சில யூடியூப் சேனல்கள் மிகைப்படுத்திப் பகிர்ந்து வருகின்றன.
