உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவன் ஒருவன், பேனாவை திருடியதாகக் கூறி பள்ளி நிர்வாகத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளான். தான் பள்ளிக்குச் செல்லாத ஒரு நாளில் நடந்த திருட்டுச் சம்பவத்திற்காக அச்சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தச் சிறுவனை வலுக்கட்டாயமாக ஒரு “குற்ற ஒப்புதல் வாக்குமூலம்” வீடியோ எடுக்கச் செய்ததாகவும், இது குறித்து ஆதாரங்களைக் கேட்ட பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் ஒத்துழைக்க மறுத்ததாகவும் தெரிகிறது.

​இந்தச் சம்பவத்தால் அந்தச் சிறுவன் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி, இரவில் தூக்கத்தில் அழுது கொண்டே எழுவதும், தனது நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வீட்டின் சுவர்களில் “உதவி” (Help) என்று எழுதுவதுமாக இருந்துள்ளான். சிறுவனின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளியின் இயக்குனர், முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் என நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.