கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி புதிய அரசுக்கு எதிராகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
”கடந்த சில வாரங்களாகவே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராகத் தொடரும் வன்முறைச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய அரசு இதில் மெத்தனமாகச் செயல்படாமல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கனிமொழி எம்.பி மிக ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார். இது புதிய அரசுக்கு அரசியல் ரீதியாகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது!
