கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இந்த வழக்கில் டெல்லி தேசிய மகளிர் ஆணையம் (NCW) தற்போது மிக அதிரடியாகக் களமிறங்கியுள்ளது.
கோவையில் பிஞ்சு சிறுமிக்கு நடந்த இந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூர வன்முறைச் செயல்கள் மிகவும் மனிதாபிமானமற்றவை என்று சாடியுள்ள தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர், இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு டிஜிபி-க்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த உத்தரவில், சிறுமி கொலை வழக்கை காவல்துறை மிக தீவிரமாகவும், அதிவேகமாகவும் விசாரித்து உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து அடுத்த 7 நாட்களுக்குள் முழுமையான விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு போலீசுக்குக் கெடு விதித்து அதிரடி ஆணை பிறப்பித்துள்ளார்.
குற்றவாளிகளான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவருக்கும் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என டெல்லியில் இருந்து பறந்துள்ள இந்த அதிரடி உத்தரவு, தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
