தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக டெல்லி செல்லத் தீவிரமாகத் தயாராகி வருகிறார் விஜய். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுவதற்காகப் பிரதமர் அலுவலகத்தில் (PMO) ஏற்கனவே முறைப்படி அனுமதி கோரப்பட்டுள்ளது.
ஆனால், பிரதமர் மோடி தற்சமயம் தொடர்ச்சியான மத்திய அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சிப் பணிகளில் படுபிசியாக இருப்பதால், முதல்வர் விஜய்க்கான சந்திப்பு நேரம் இன்னும் ஒதுக்கப்படவில்லை என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. PMO-வில் இருந்து க்ரீன் சிக்னல் கிடைத்த உடனே, முதல்வர் விஜய் தனது அதிகாரப்பூர்வ டெல்லி பயணத்தை மேற்கொள்ளவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது
