கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு தமிழக முதல்வர் விஜய்க்கு அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ​”தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், சட்டம் ஒழுங்கு காட்சி மாறவில்லை” என விமர்சித்துள்ள அவர், இந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நிஜமான குற்றவாளிகளா என்ற அதிரடி கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு உச்சகட்ட தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் விஜய்க்கு எஸ்பிவி வலியுறுத்தியுள்ளார்.