தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக டெல்லி செல்லவிருக்கும் விஜய், அங்கு வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்புகளோடு நிறுத்திக் கொள்ளாமல், தமிழகத்தின் மிக முக்கிய பொருளாதாரத் தேவைகளுக்காக மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெற பக்கா ‘மாஸ்டர் பிளான்’ ஒன்றை கையில் எடுத்துள்ளார். இதற்காகக் கடந்த வாரம் சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித் துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் மிகத் தீவிரமான அவசர ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார்.

​இந்த ரகசிய கூட்டத்தின் போதுதான், கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட கடுமையான கடன் சுமைகளும், நிதி நெருக்கடியும் தற்போதைய புதிய அரசுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்பது முதல்வர் விஜய்க்கு முழுமையாகத் தெரியவந்துள்ளது. திமுக விட்டுச் சென்ற இந்த நிதிப் பற்றாக்குறையைச் சமாளித்து, மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமானால் மத்திய அரசின் உதவி அவசியம் என்பதால், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்கும் போது சமர்ப்பிப்பதற்கான வலுவான கோரிக்கை அறிக்கையைத் தயார் செய்ய அதிகாரிகளுக்கு அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.