தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சியமைப்பதற்கான உரிமை கோரத் தயாராகி வரும் வேளையில், அவருக்கு எதிராக புதிய சட்டச் சிக்கல் ஒன்று கிளம்பியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை முறைப்படி நிரூபிக்கும் வரை, விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தமிழக ஆளுநருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஜனநாயக ரீதியாகவும், அரசியல் சாசனக் கொள்கைகளின் படியும் பெரும்பான்மை இல்லாத ஒருவரை ஆட்சியமைக்க அழைப்பது முறையல்ல என்று அவர் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஒருபுறம் விஜய் ஆளுநரைச் சந்திக்கத் தயாராகி வரும் நிலையில், இந்தப் புகார் கடிதம் தவெக வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் அரசியல் பயணம் அடுத்த கட்டத்திற்குச் செல்லுமா அல்லது சட்ட ரீதியான முட்டுக்கட்டைகளைச் சந்திக்குமா என்பது ஆளுநரின் முடிவிலேயே உள்ளது.