மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் மக்களவை முன்னாள் சபாநாயகர்மான மனோகர் ஜோஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 85. வயது முதிர்வு காரணமாக அவருக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் 1995 முதல் 99 வரை மகாராஷ்டிரா முதல்வராக இருந்தவர். மருத்துவமனையில் இருக்கும் அவரை முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே நேரில் சந்தித்தேன் நலம் வேண்டினார். அவரின் உடல்நிலை குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.