இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக பொதுமக்களுக்கு அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக whatsapp பயன்படுத்தும் பலருக்கும் வெளிநாட்டு எண்களில் இருந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.இது குறித்து எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. அதில், வெளிநாட்டு நபர்களில் இருந்து வரும் அழைப்புகள் குறித்து கவனமாக இருங்கள். அது மோசடிக்காரர்களின் சரியாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. நம்முடைய தகவல்களை பத்திரமாக வைப்பது நமது கடமை என்பதால் இதுபோன்ற போலி அழைப்புகளை தவிர்ப்பது நல்லது.