தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன் சில நாட்களாக சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்தார். தற்போது பாலையா மற்றும் சிரஞ்சீவி மாதிரியான சீனியர் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் முதுகில் போட்டுள்ள புதிய டாட்டூ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே தனது பெயரான சுருதி என்று முதுகின் பின்புறத்தில் டாட்டூ போட்டு இருந்தார்.

தற்போது அதில் முருகனின் வேல் வடிவத்தை குறித்துள்ளார்..தற்போது இவர் ஆன்மீகத்தில் அதிகம் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. முருகன் அவருக்கு மிகவும் பிடித்த கடவுள் என்பதால் வேலை பச்சை குத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.