80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து தனது அழகால் ரசிகர்களை கட்டிபோட்டவர் நடிகை குஷ்பூ. இவர் கடந்த 2001 ஆம் வருடம் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திகா என்ற மகள்களும் உள்ளனர். இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தாமல் வெள்ளிதிரையிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார் குஷ்பூ.

இதற்கிடையில் அரசியலிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். இவருடைய மகள்கள் இருவரும் வெளிநாட்டில் படித்து வரும் நிலையில் இருவருடைய உடலை வைத்து இணையயவாசிகள் பல கிண்டல்களை செய்து வந்தனர். அதன் பிறகு இருவரும் அதிகமான ரிஸ்க் எடுத்து உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மா உள்ளனர். இந்நிலையில் குஷ்பூ மகள் அவந்திகா இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக படு பயங்கர கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசங்களோ, நீங்க நல்லா இருக்கீங்க பட் உங்களோட ஆடை மோசமாக உள்ளது என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.