தமிழக முதல்வர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் தலை சுற்றல் பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை காண்பதற்கு அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் ஹாஸ்பிடலுக்கு சென்ற நிலையில் பின்னர் அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளிவந்தது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் குணமடைய வேண்டும் என பலரும் வாழ்த்தி வருகிறார்கள். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழ்நாட்டை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. மேலும் அவர் பூரண குணமடைய வேண்டும் என்று என்னுடைய சார்பாகவும் தமிழக மக்கள் சார்பாகவும்  பிரார்த்திக்கிறேன் என்றார்.