தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக (இன்று) ஜூலை 21ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற, முன்னாள் எம்.பி அன்வர் ராஜா திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், அவர் மருத்துவமனைக்குச் சென்றார்.

முதல்வருக்கு வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும், அவருக்கு 2 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேநேரத்தில், காலை நடைபயிற்சியின் போது முதலமைச்சருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தேவையான சோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதைக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி, அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

முதலமைச்சரின் உடல்நிலை தற்போது மேம்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் சுகமாக வீடு திரும்புவார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதலமைச்சர்  விரைவாக  குணமடைவை வேண்டி திமுகவினரும், பொதுமக்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.