என்ன மடைமாற்றம் செய்தாலும் சரி என்னுடைய எழுச்சி பயணம் தொடரும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டார். இதனை அமைச்சர் கே.என் நேரு விமர்சனம் செய்தார். இந்நிலையில் அவருக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது சம்பத்தியை மீட்போம் சம்பாதித்த பணத்தை காப்போம் தமிழகத்தை விற்று மகனைக் காப்போம் என என் மீது அமைச்சர் கே என் நேரு அவதூறு பரப்புகிறார்.
மந்தி தனது குட்டிகளை விட்டு ஆழம் பார்ப்பது போல முதலமைச்சர், கே என் நேருவை விட்டு அறிக்கை வெளியிட வைத்துள்ளார். மருமகனை, மகனை காப்போம் ரியல் எஸ்டேட் மூலம் தமிழகத்தை எதிர்ப்போம் என்ற ஸ்டாலின் எண்ணத்தை கூறும் விதமாக கே என் நேரு பெற்றிருக்கிறார். வருகிற 2026 இல் அதிமுக வெற்றி பெற்று நல்லாட்சி தரும்போது தவறு செய்த தற்போது ஆளும் கட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
