முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் இன்று கலந்துகொண்டார். இந்நிலையில், திடீரென முதல்வர் ஸ்டாலினுக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளதால் மதியம் 3 மணியளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இதுபற்றி அப்போலோ மருத்துவமனை இதுபற்றி அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கமான பரிசோதனைக்காக முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை அவர் வீடு திரும்புவார் எனவும் கூறப்பட்டுள்ளதுவெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கமான பரிசோதனைக்காக முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை அவர் வீடு திரும்புவார் எனவும் கூறப்பட்டுள்ளது.