முதலமைச்சர், ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் குறித்த 386 அவதூறு வீடியோக்கள் நீக்கப்பட்டதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் தடை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 386 வீடியோக்களை தடை செய்ய யூடியூப்-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 221 சட்ட விரோத கடன் செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.