இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் மூலமாக கடன் பெறுவதற்காக பல புதிய செயலிகள் ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து விளம்பரங்களும் சமூக வலைதளங்கலில் பரப்பப்படுகிறது. மேலும் கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பற்றிய விவரங்களை புகைப்படங்களையும் whatsapp குழுக்களில் வெளியிடுகிறது. செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு தவறாக பேசுவது மிரட்டல் விடுவது போன்ற செல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடன் செயலின் மூலமாக கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் 221 மோசடி கடன் வழங்கும் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் 61 மோசடி கடன் வழங்கும் செயலிகளை நீக்க கூகுள் நிறுவனத்திற்கும், முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட உயரிய பொறுப்பில் உள்ள நபர்களின் அவதூறு வீடியோக்களை நீக்க youtube நிறுவனத்திற்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.