“என் வகுப்பறையில் என்னை வெறும் பாடப் புத்தகத்திற்குள்ளும் மார்க்குகளுக்குள்ளும் அடைத்து வைக்கும் ஆசிரியரை நான் விரும்பவே மாட்டேன், என்னைச் சுதந்திரமாக கேள்வி கேட்க விட்டு என் தனித்திறமையைக் கண்டறியும் நண்பனைத் தான் எதிர்பார்ப்பேன்!” என்று டெல்லியில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடம் பிரதமர் நரேந்திர மோதி ஒரு மாணவனின் மனநிலையை நேரில் விவரித்து மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார்.

100-க்கு 90 மார்க் எடுக்காத குழந்தைகளை ‘மக்கு’ என முத்திரை குத்தாமல், அவர்களிடம் ஏற்படும் நடத்தை மாற்றங்களை (Behavioral changes) ஆரம்பத்திலேயே கவனித்துத் தோழனாகக் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், இன்றைய தலைமுறையை அமைதியாகக் காலி செய்து வரும் அதிகப்படியான மொபைல் ஸ்கிரீன் பயன்பாடு மற்றும் போதைப்பொருள் பழக்கம் ஆகிய இரண்டு பேராபத்துகளில் இருந்தும் மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று எச்சரித்த மோதி, குழந்தைகளை வெறும் மார்க் வாங்கும் ரோபோக்களாக மாற்றாமல், விளையாட்டு மைதானத்திற்கும் நிஜ உலக அனுபவங்களுக்கும் அனுப்பி முழுமையான மனிதர்களாக உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

“>