நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரையில் சமீபத்தில் மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான மாடுகள் கலந்து கொண்ட நிலையில் முதல் முறையாக சீமான் ஆடு மாடுகள் முன்னிலையில் பேசினார். அவர் வனப்பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதை தொடர்ந்து தற்போது மரங்களுக்காக மாநாடு நடத்த இருப்பதாக கூறியுள்ளார். இந்த மரங்கள் மாநாட்டின் போது மரங்களோடு பேச இருப்பதாகவும் மரம் மண்ணின் அறம் என்பதால் மனிதர்கள் மரங்களை நட வேண்டும் என வலியுறுத்தினார். ஆடுகளும் மாடுகளும் இல்லாமல் ஒரு நாடு எப்படி வளம்பெறும். உயர்திணை சரியாக வாழ வேண்டும் என்றால் அகர்தினை வளர வேண்டும் என்றார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் இது பற்றி தொடர்ந்து கூறும் போது, ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி மரங்கள் மாநாடு நடத்த இருப்பதாக தெரிவித்தார். மேலும் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக மற்றும் பாஜகவை பார்த்து எதற்காக பயப்பட வேண்டும் எனவும் திமுகவுக்கு தேர்தல் வந்துவிட்டால் மக்கள் மீது காதல் வந்துவிடும் எனவும் பள்ளம் மூடப்படும் என்றும் விமர்சித்தார்.
