பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருப்பதாக குற்றம் சாட்டி அது தொடர்பான வீடியோவை வெளியிட்டு திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும் காணொளி மிகுந்த கவலையளிக்கிறது.

பச்சிளம் குழந்தைகளைப் படுக்கவைக்கக்கூட வசதியில்லாத இந்த மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா? முறையான வசதிகள் ஏற்படுத்தித் தருவதை விட்டுவிட்டு விளம்பரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதற்கு @arivalayam அரசு வெட்கப்பட வேண்டும்!